மியான்மரில் ஏற்பட்ட படகு விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். படகில் பயணம் செய்த மேலும் 12 பேரைக் காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயர்வாடி பகுதியில் உள்ள காவூன் நதியில், திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு 66 பேர் ஒரு படகில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது எதிரே கிராவல் ஏற்றி வந்த மற்றொரு படகின் மீது பயணிகள் படகு மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே ஆற்றில் மூழ்கி படகில் பயணம் செய்த மூன்று குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 20க்கும் மேற்பட்டோரை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மியான்மரில் படகு விபத்து அடிக்கடி ஏற்படுவது வாடிக்கை. சாலை இணைப்பு வசதிகள் இல்லாததாலும், கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாலும் பெரும்பான்மை மக்கள் படகுப்போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.

ஆனால், அதிக கூட்டம் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக அடிக்கடி மியான்மரில் படகு விபத்து ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்ற படகு விபத்தில் 48 பேர் பலியாகின