சென்னை:

யிலாப்பூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பெண் போலீஸ், பணி முடிந்து  தனது வீட்டுக்கு வந்தவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் வடபழனி காவல்நிலைய  தலைமையகத்தில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் தூக்குப்போட்டு  தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது ஒரு பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது காவலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாப்பூர் காவல் நிலையத்தில், சட்ட ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்தவர் உமா லட்சுமி. இவர் சம்பவத்தன்று  அலுவல் பணி முடிந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றவர், உடை மாற்றிவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறி அறைக்குள் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால், பதபதைப்பு அடைந்த அவரது பெற்றோர் அறைக்கதவை  உடைத்து பார்த்தனர்.

அப்போது,  உள்ளே உமாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பட்டினம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடடினயாக சம்பவ இடத்திற்கு வந்த பட்டினபாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை நெருக்கடி மன அழுத்தம் காரணமாக இதுபோன்ற தற்கொலைகள் தொடர்வாக குற்றம் சாட்டப்படுகிறது.