மயிலாப்பூர் கோவில் சிலை விவகாரம்: ஆவணங்கள் அழிந்து விட்டதாக உயர்நீதி மன்றத்தில் தகவல்

சென்னை:

யிலாப்பூர் கோவிலில் உள்ள மயில்  சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில்,  ஆவணங்கள் அழிந்து விட்டதாக உயர்நீதி மன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல நூற்றாண்டுகள் பெருமை கொண்டது மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவில். வராற்றுச் சிறப்பு மிக்க இந்த கோவிலில் உள்ள சாமி சிலைகள் பாரம்பரியமானது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்குள்ள ஒரு கோவில் கருவறையில்,  சிவபெருமானை மயில் உருவத்தில் பார்வதி தனது வாயில் குவளை மலர் கொண்டு அர்ச்சிக்கும் காட்சியில் சிலை இருந்தது.

இந்த சிலையானது, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கா தால், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடுத்த ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மயிலாப்பூர் சிலை மாற்றப் பட்டது தொடர்பான ஆவணங்கள் அழிந்துவிட்டதாக அறநிலையத்துறை கடிதம் கொடுத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. மேலும், அறநிலையத் துறை கொடுத்த கடிதமும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். ஆவணங்கள் அழிக்கப் பட்டது நிரூபணம் ஆனால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும்,  அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுவதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், ஆவணங்கள் அழிந்தது மற்றும் சிலை மாற்றம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

கார்ட்டூன் கேலரி