மைசூரில் பரிதாபம்: கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பலி…

மைசூர்,

ர்நாடக மாநிலம் மைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மைசூர் அருகே உள்ள விஜயநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில்  கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பலியான சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

மைசூருவை அடுத்த கும்பாரகுப்பலு என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மகாதேவச்சாரி- கவிதா. இவர்களது 3 வயது குழங்தை கிருஷ்ணா.

baby

கவிதா விஜயநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார். தம்பதிகள் இருவரும வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக்கொள்ள ஆளில்லை. இதன் காரணமாக  கவிதா வேலைக்கு செல்லும் போது குழந்தையை தன்னுடன் அழைத்து சென்றுவிடுவார்.

சம்பவத்தன்று கவிதா பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணா அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரில் எதிர்பாராதவிதமாக விழுந்தான்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஹோட்டல் ஊழியர்கள்  குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தையில் உடலில் தீக்காயம் அதிகம் இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மைசூரில் உள்ள  கே.ஆர் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சைப்பலனின்றி குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

இதைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் ஹோட்டல் முன்பு போராட்டம் நடத்தினர். ஹோட்டல் நிர்வாகம் இழப்பீடு வழங்குவ தாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கார்ட்டூன் கேலரி