சூப்பர் ஸ்டார்கள் தங்கிய  ஸ்டார் ஓட்டல் மூடப்பட்டது..

சூப்பர் ஸ்டார்கள் தங்கிய  ஸ்டார் ஓட்டல் மூடப்பட்டது..

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ‘ சதர்ன் ஸ்டார்’’ என்ற ஓட்டல் , அந்த சுற்றுலா நகரின் பெருமைமிகு  அடையாளம் ஆகும்.

கொரோனா வைரஸ், அந்த அடையாளத்தை அழித்தொழித்து விட்டது.

மைசூரூக்கு சினிமா ஷுட்டிங் வரும் ரஜினிகாந்த், சல்மான் கான்,ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஸ்டார்கள், இந்த ஓட்டலில் தான் தங்குவது வழக்கம்.

33 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஓட்டலில் 107 அறைகள் உள்ளன.

ஆண்டுக்கு 200 நாட்கள் இந்த ஓட்டல் ‘ஹவுஸ் புல்’லாகவே இருக்கும்.

ஊரடங்கால், இப்போது ’’ஈ ‘ அடிக்க ஆரம்பித்துள்ளது, இந்த ஓட்டல்.

’சதர்ன் ஸ்டார்’ ஓட்டலை காலவரையின்றி மூடிவிட்ட நிர்வாகம் , அங்கு வேலை பார்க்கும் 160 பணியாளர்களையும் வீட்டுக்கு அனுப்பி விட்டது.

ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து போனதால், மைசூருவில் உள்ள  தங்கள் ஓட்டல்களை விற்கும் முடிவுக்கு வந்துள்ளனர், அங்குள்ள வேறு பல ஓட்டல்களின் உரிமையாளர்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்