தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் மட்டுமன்றி தயாரிப்பாளர் மற்றும் நடிகராகவும் வலம் வருகிறார்.

திரையுலகம் தாண்டி எப்போதுமே புத்தக வாசிப்பை மட்டுமே பழக்கமாக வைத்திருப்பவர். சமூக வலைதளம் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், முதல் முறையாக ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

@DirectorMysskin என்ற பெயரில் இவருடைய ட்விட்டர் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.