மிஷ்கின் தயாரிப்பில் மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் படம் ‘பிதா’.
‘பாக்ஸர்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் மதியழகன்.

‘பிதா’ படத்தை மிஷ்கின் மற்றும் ஸ்ரீ கிரீன் சரவணன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தில் கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதாரவி, மதியழகன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், சில நடிகர்களையும் இதில் நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார்.
நேற்று இப்படத்தின் படப்பிடிப்பி சிறிய பூஜையுடன் தொடங்கியுள்ளது .