மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘பிசாசு 2’…..!

--

‘சைக்கோ’ படத்தைத் தொடர்ந்து, ‘பிசாசு 2’ படத்தை இயக்க மிஷ்கின் முடிவு செய்துள்ளார் .

தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை செப்டம்பர் 20-ம் தேதி வெளியிடவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் மிஷ்கின். அதன்படி இரவு 12 மணிக்கு பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் போஸ்டரை வெளியிட்டு அதில் நடிப்பவர்களை டேக் செய்துள்ளார் .

இந்த படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், ஆண்ட்ரியா மற்றும் ‘சைக்கோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் ,

முதல் பாகத்தை விட, நூறு மடங்கு அதிக திகில் காட்சிகள் இடம்பெறும் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

You may have missed