‘துப்பறிவாளன் 2’ இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விலகல்….!

‘துப்பறிவாளன் 2’ படத்திற்காக மீண்டும் இணைந்தனர் விஷால் – மிஷ்கின் கூட்டணி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா ஆகியோர் நடிக்கின்றனர். 40 நாட்கள் முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த நேரத்தில் விஷால் – மிஷ்கின் இருவருக்கும் மோதல் வெடித்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘சைக்கோ’ பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்துக்கு மிஷ்கின் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது .

இதற்குப் பிறகு மீதமுள்ள காட்சிகளை விஷாலே இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை நிலவரம் என்ன என்பதை விஷால் – மிஷ்கின் இருவருமே கூறவில்லை.