டோக்கியோ: ஜப்பான் நாட்டின் செண்டாய் நகரின் மேல், ஜுன் 17ம் தேதி பறந்த வானிலை பலூன் பற்றிய மர்மம் இன்னும் நீடிக்கிறது. அந்த பலூன் தங்களுடையது அல்ல என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளை நிறத்தில், மனிதர்கள் யாருமின்றி, குறுக்காக இரண்டு புரபெல்லர்களுடன் ஒரு பலூன், காலை 7 மணியளவில் செண்டாய் நகரின் மேலாகப் பறந்தது.

அந்த பலூன் எங்கிருந்து வந்தது என்ற விபரம் எதுவும் தெரியாத நிலையில், பலமணி நேரங்கள் பறந்த பின்பாக, பசிபிக் கடல் பக்கமாக சென்று மறைந்துவிட்டது.

இந்த பலூன் தங்களுடையது அல்ல என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் மறுத்துவிட்டது. அதேசமயம், அது வேற்று கிரகத்திலிருந்து வந்திருக்குமா? என்ற கருத்தும் மறுக்கப்பட்டுவிட்டது. இந்த பலூன் எங்கிருந்து வந்தது? & யாருடையது? என்ற தகவலுக்கான விடை இன்னும் கிடைக்கவில்லை.

‍அதேசமயம், இந்த பலூன் வடகொரியாவிலிருந்து வந்திருக்கலாம் அல்லது கொரோனா வைரஸை பரப்புவதற்காக ஏவப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் அந்நாட்டு சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.