மைசூர், 

மைசூர் கோவில் அருகே பிச்சை எடுத்து வந்த மூதாட்டி ஒருவர், அந்த கோவிலுக்கு தான் சேமித்து வைத்த பணத்தில் இருந்து  ரூபாய் 2.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

எம்.வி.சீதாலட்சுமி என்ற 85 வயதான அந்த பெண் மைசூரில் அருகே உள்ள வன்டிகொப்பல் பகுதியில் உள்ள பிரசன்ன ஆஞ்சனேய சுவாமி கோவில் வாயிலில் பிச்சை எடுத்து வருகிறார்.

தற்போது மிகவும் பலவீனமான உடல்நிலையில் இருந்து வரும் அந்த மூதாட்டி, தான் பிச்சை எடுத்து சேமித்த பணத்தில், பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தியின்போது  பிரசாதமாக வழங்குவதற்காக ரூபாய் 2.5 லட்சம்  நன்கொடையாக வழங்கினார்.

அவரது தாராளமான நன்கொடி குறித்து கேள்விப்பட்ட, கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த மூதாட்டியை வாழ்த்தி செல்கிறார்கள். மேலும் பலர் அந்த மூதாட்டியிடம் ஆசிர்வாதமும் பெற்று செல்கிறார்கள்.

அந்த 85வயது மூதாட்டியின், சகோதரர் மற்றும் மைத்துடனருடன் யாதவ்கிரி என்ற பகுதியில் வசித்து வருவதாகவும், ஆனால், அவர் அவர்களை சார்ந்து இருக்க விரும்பாமலும், தன்னால் வேலை செய்ய முடியாத நிலையில், கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்து வருகிறார்.

இவர் ஏற்கனவே பிள்ளையார் சதுர்த்தியின்போது   30,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். தற்போது, கோவிலின்  அறக்கட்டளைத் தலைவர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து  2 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். மொத்தம் இதுவரை   ரூ. 2.5 லட்சத்திற்கும் மேலாக கோயிலுக்கு தனது சார்பாக நன்கொடையாக பங்களித்தி ருக்கிறார்.

இதுகுறித்து அந்த மூதாட்டி கூறுகையில், நான் வங்கியில் என்ன வைத்திருக்கிறேன் என்றும், பக்தர்களுக்கு என்னென்ன கொடுத்தேன் என்று எனக்கும் தெரியும், கடவுளுக்கும் தெரியும். என்னை நன்றாக கவனித்து கொள்கிற கோவிலுக்கு நான் பணம் கொடுக்க முடிவு செய்தேன் என்றும், நான் வாரம் ஒருமுறை குளிக்க ஆலயத்தினர் உதவி செய்வதாகவும் அவர் கூறி உள்ளார்.

மேலும், தான் பிச்சை எடுத்தும் சம்பாதிக்கும் பணத்தை எனது தேவை போல மீதமுள்ள பணத்தை சேமித்து, அனுமன் ஜெயந்தியின்போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க நன்கொடைய வழங்கினர் என்றும், அதுவே எனது ஆசை என்றும் கூறி உள்ளார்.