அதிமுக வுக்கு பாஜக  ஒரு பொருட்டே  கிடையாது : மைத்ரேயன் கருத்து

சென்னை

ர் கே நகர் தேர்தலில் எங்களுக்கு பாஜக ஒரு பொருட்டே கிடையாது என அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் கூறி உள்ளார்.

ஓபிஎஸ் அணியைச் சார்ந்த மைத்ரேயன் சமீபத்தில் இணைப்புக்குப் பின்னும் இதயங்கள் இணையவில்லை என்னும் கருத்தில் சமூக வலை தளத்தில் ஒரு பதிவு இட்டிருந்தார்.   அதனால் கட்சிக்குள் கடும் சலசலப்பு ஏற்பட்டது.  அதற்குப் பிறகும் அவர் அதிகம் ஒட்டாமல் இருந்ததாக கூறப்பட்டது.  நேற்று ஆர் கே நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை மைத்ரேயன்  சந்தித்துள்ளார்.   அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார்.

அப்போது அவர், “அதிமுக வேட்பாளருக்கு ஆர் கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.   அதிமுகவினரைப் பொறுத்தவரையில் தேர்தல் என வந்து விட்டால் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்.   தினகரன் அதிமுக கொடியை பயன்படுத்தும் உரிமையை இழந்து விட்டார்.  அதனால் தான் அண்ணா படம் இல்லாத அதிமுக கொடியை பயன்படுத்துகிறார்.

இந்த தேர்தலில் பாஜக போட்டியிடுவதால்  எங்களுக்கு பலமும் இல்லை, பலவீனமும் இல்லை.   ஏனெனில் அதிமுகவுக்கு பாஜக ஒரு பொருட்டே கிடையாது   எங்களிடம் உள்ள வாக்கு வங்கியின் மூலமே எங்களால் ஜெயிக்க முடியும்.   ஆர் கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மாபெரும் வெற்று சூடுவார் என்பதில் ஐயமே இல்லை” எனக் கூறி உள்ளார்.