ஓவியாவிடம் ஆபாசமாக பேசிய நெட்டிஸன்.. ஜாலி மூடில் நடிகை கலகல..

டிகைகளில் வித்தியாசமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர் மீது அன்பு காட்டி ஆறுதல் சொன்னார். ஆனால் அந்த போட்டியாளரோ ஓவியா வையே குறை சொல்ல அன்றைக்கு ரசிகர் களின் கவனத்தை ஈர்த்தார் ஓவியா.

அங்கிருந்து வெளியில் வர காதல் தோல்வி நாடகம் நடத்தி அதன் மூலமும் ரசிக பட்டாளத்தை வளைத்தார்.
கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் ஓவியா அவ்வப்போது ரசிகர் களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். காலையில் எழுந்ததும் என்ன செய்வீர்கள், எப்போது கல்யாணம் என்று சரமாரியாக நெட்டிஸன்கள் கேட்க கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார். ஓவியா கூறியதாவது:
நான் காலையில் ஒரு வாழைப்பழம், கிரீன் டீ எடுத்துக்கொள்வேன். பிக்பாஸில் என்னைதான் எனக்கு மிகவும் பிடிக்கும். திருமணம் எப்போது என்று பலரும் கேட்கிறார்கள். என் வாழ்க்கையில் நிறைய லிஸ்ட் இருக்கிறது. ஆனால் அந்த லிஸ்ட்டில் என்னுடைய திருமணம் கிடை யாது. நான் பள்ளிக்கு சென்று நேர்தையும் பணத்தையும் செலவழித்து விட்டோனோ என்று எண்ணும் அளவுக்கு, ’நீ பள்ளிக்கு சென்று உன் தினசரி வாழ்க்கைக்கு தேவையானது எதையாவது கற்றுக்கொண் டாயா’ என்று கேட்டு சிந்திக்க வைத்து விட்டார்.
இவ்வாறு ஒவியா கூறினார்.
ஒரு நெட்டிஸன் ஆபாசமாக ஒவியாவிடம் ஒரு விஷயம் சொல்ல அதற்காக கோபப்படாமல், ’அது உங்களுக்கு நல்லது’ என்று குழப்பமான ஒரு பதிலை சொல்லி கேள்வி கேட்டவரை குழப்பி விட்டார்.