2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி தனித்து போட்டி! சீமான் அதிரடி

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழகர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. முன்னதாக மாநில சட்டமன்ற தேர்தல், 2021ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, திமுக, அதிமுக உள்பட பல அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எப்போதும்போல, வர இருக்கும்  தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அதிரடியாக அறிவித்தார்.

தமது கட்சி, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைத்து கொள்ளாது என்று கூறினார்.