சீமான் கைது?

எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் சீமான், பாதிக்கப்பட்டர்களை சந்தித்தபோது சற்று நேரத்துக்கு முன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. விவசாய நிலங்கள் குடியிருப்புகள் இந்த சாலைக்காக கையகப்படுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் மாவட்டம் சேலம் மாவட்டம், பாறைப்பட்டி அருகே பூவாங்காடு பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்தார். இந்த பகுதியும் எட்டுவழிச்சாலையால் பாதிக்கப்படும் பகுதியாகும்.

சீமானுடன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன், மாநில மகளர் பாசறை தலைவர் ஜானகியம்மாள்,  சேலம் மாவட்ட தலைவர் சசிகுமார் உள்ளிட்ட பலர் அங்கு சென்றிருந்தனர். அவர்களில் சீமானை மட்டும்  முற்பகல் 11.30 மணிக்கு   காவல் நிலையத்துக்கு காவலர்கள் அழைத்துச்சென்றிருப்பதாகவும், ஆகவே அவரைக் கைது செய்யும் திட்டம் காவல்துறைக்கு இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளை கண்டித்து மத்திய, மாநில அரசுகளை  எதிர்த்து சீமான் பேசியிருந்தார்.  இதற்காக அவர் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்குக்காகவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.