திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்…?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களை, மார்ச் 7ம் தேதி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஒரே மேடையில் சீமான் அறிமுகப்படுத்துகிறார். அவர்களில் 117 ஆண் வேட்பாளர்களுக்கு இணையாக, சம உரிமை என்ற அடிப்படையில் 117 பெண் வேட்பாளர்களை அறிவிக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும், எடப்பாடி தொகுதியில் ஸ்ரீரத்னா என்ற பெண் போட்டியிடுவார் என்றும், ஓபிஎஸ் போட்டியிடும் போடியில் பிரேமச்சந்திரன் என்பவர் போட்டி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்டாலின் களமிறங்கும் கொளத்தூரில் சீமான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட சீமான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.