போராட்டத்தின்போது காவலரை தாக்கிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது

சென்னை:

மிழகம் முழுவதும் காவிரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்று கடந்த 10ந்தேதி சென்னையில் தமிழக அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் காவலர் ஒருவரை தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய மயிலாப்பூர் போலீசார், போராட்டத்தின் போது கிடைத்த வீடியோ பதிவுகளை கொண்டு, நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் பொறுப்பாளர் ஆல்பர்ட் ஸ்டாலின் என்பவரை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.