சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் ‘நா நா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

 

நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் ‘நா நா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சசிகுமார் உடன் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: First Look, naa naa, sasikumar, shaath kumar
-=-