‘நாங்க ரொம்ப பிஸி’ மேக்கிங் வீடியோ வெளியீடு….!

சுந்தர்.சி-யின் தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவீஸ் மூலம் இதுவரை ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது 6வது திரைப்படமான நாங்க ரொம்ப பிஸி படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக பிரேமும் மற்றும் நடன இயக்குனராக தினேஷும் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி.

கன்னடத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மாயா பஜார் 2016’ ரீமேக் தான் நாங்க ரொம்ப பிஸி.

நவம்பர் 15ஆம் தேதி இந்த படம் சன் NXT தளத்தில் வெளியானது. தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கலகலப்பான இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்லாவே வரவேற்பை பெற்று வருகிறது.