பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் நாச்சியார் டீசர் நாளை ரிலீஸ்

 

பாலா – ஜோதிகா

பாலா இயக்கத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் நாச்சியார். இந்தப்படத்தின்  டீசா் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சற்று இடைவெளிக்கப் பிறகு பாலா இயக்கத்தில்.. (அட.. எப்பவுமே இடைவெளிதாண்டித்தானே அவரு படம் வரும்) வெளியாக இருக்கும் படம், நாச்சியார். இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார் ஜோதிகா. இசை இளையராஜா.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து,  போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த நிலையில்  படத்தின் டீசரை நாளை வெளியிடுகிறார்கள். வெளியிடுபவர் சூா்யா.

 

மனைவிக்கு கணவர் ஆற்றும் உதவி.. டீசரை பிரமோட் செய்திடல்?

கொசுறு: டிசம்பர் மாதம் படம் ரிலீஸ் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பாலா இயக்கும் படம் என்பதால் அது உறுதி என சொல்லவும் முடியாது.