அரையிறுதியில் ரோஜர் ஃபெடரரை சந்திக்கும் ரஃபேல் நாடல்

பாரிஸ்: தற்போது நடைபெற்றுவரும் ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிப் போட்டியில், ரஃபேல் நாடல், தன்னை எதிர்த்து விளையாடிய கெய் நிஷிகோரியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் அவர் 12வது முறையாக ஃபிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அரையிறுதியில் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரோஜர் ஃபெடரரை சந்திக்கவுள்ளார். இரண்டு சிறந்த வீரர்கள் மோதும் இந்த அரையிறுதிப் போட்டி உலகளவில் பெரிய கவனத்தைக் கவர்ந்துள்ளது.

ரஃபேல் நாடல் காலிறுதிப் போட்டியில் வென்றுள்ளதன் மூலம், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தனது 91வது வெற்றியைப் பதிவுசெய்தார்.

இந்த வெற்றி தனக்கு கவுரவம் அளிப்பதாகவும், ஜுன் 7ம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியை முக்கியமானதாய் கருதுவதாயும் கூறியுள்ளார் நாடல். நாடல் மற்றும் ரோஜர் ஆகிய இருவரும் சந்திக்கும் அரையிறுதிப் போட்டி என்பது, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர்களின் 39வது சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-