டெல்லி: பாஜக துணைத்தலைவர்களாக ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் ரமன் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹெச். ராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

பாஜகவில் முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் ஜேபி நட்டா நியமித்துள்ளார். அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது, அதன் படி 12 துணைத்தலைவர்கள், 8 பொதுசெயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேசிய துணைத்தலைவர்களாக, சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் ரமன்சிங், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ராதாமோகன் சிங், பைஜெயந்த் ஜெய பான்டா, ரகுபர்தாஸ், முகுல்ராய், ரேகா வர்மா, அன்பூர்ணா தேவி, பார்தி பென்ஷியால், அருணா, சுபா, அப்துல்லா குட்டி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று தேசிய பொது செயலாளர்களாக, பூபேந்தர் யாதவ், அர்ஜூன்சிங், கைலாஷ் விஜயவர்க்கியா, துஷ்யந்த் குமார் கவுதம், புரந்தேஸ்வரி, ரவி, தருண் சவுக், திலிப் சாக்கியா ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தேசிய இணை பொது செயலாளர்களாக சதீஷ், சவுதான் சிங், ஷிவ்பிரகாஷ் சிங் ஆகியோரும், தேசிய செயலாளராக வினோத் தவாடேவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து பொறுப்பாளர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.