கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலை போல அனைத்து தொலைக்காட்சிகளிலும் லைவ் டெலிகாஸ்ட் ஆகியது இந்த நடிகர் சங்க தேர்தல். 3500 பேர் கொண்ட இந்த சங்கத்தின் தேர்தல் எதற்காக இப்படி ஒரு பரபரப்பு என்றால் அதற்கு முக்கிய காரணம் விஷாலின் குற்றச்சாட்டு தான், சங்கத்தில் ஊழல், சங்கத்தின் கட்டிடம் மீட்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களை போல இவர் பேசிய ஆவேசமான பேச்சுகள் அதுமட்டுமல்ல ராதாரவியின் பீப் பேச்சுக்கள் என்று கலை கட்டியது அந்த தேர்தல்.
தேர்தல் நடக்கும் போது யாரோ விஷாலை கம்பியால் தாக்கியதாகவும் அவர் மயக்கம் அடைந்ததாகவும் நடந்த விஷயங்களை மறக்க முடியுமா பாண்டவர் அணியின் டர்னிங் பாய்ன்ட் அது தான். அதன் பின் விஷாலின் அணி வெற்றி பெற்றது, நாசர் தலைவராக ஆனார், விஷால் செயளாலராக ஆனார். கார்த்திக் பொருளாலர், கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
nadigar-sangam
அதன்பின் இவர்கள் தலைமையிலான சங்கம் பல நற்பணிகளுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் ஓடி ஓடி பணியாற்றினர். ஒரு வழியாக சங்கத்தின் கட்டிடத்தையும் மீட்டுவிட்டார்களாம் அதன்பின் கட்டிடம் கட்ட சங்கத்தில் பணம் இல்லாததால் நட்சத்திர கிரிக்கெட் நடத்தி சன் டிவியிடம் இருந்து கோடிகளை பெற்றனர். அந்த பணத்தில் பல திட்டங்கள் நடைபெறுவதாக நிர்வாகாம் தெரிவித்தனர். அந்த கட்டிடத்தில் தான் விஷால் திருமணம் செய்துக்கொள்வேன் என்று கூறியுள்ளதால் விறுவிறுவென பணிகள் நடைபெருகின்றன.
அதன்பின் இவர்கள் நல்ல அணியாக உள்ளனர் என்று நினைத்த காலத்தில் தான் வாராகி என்பவர் சங்கத்தில் ஊழல் நடக்குது, விஷாலும் நாசரும் 3 கோடி ஊழல் செய்துள்ளனர் என்றார். அட ச்சே இவங்களும் இப்படித்தான என நினைத்த போது விஷாலும் நாசரும் நாங்கள் ஊழலில் ஈடுபடவில்லை வேண்டும் என்றால் சங்க உறுப்பினர்கள் அல்லாத ஆட்கள் கூட வந்து எங்கள் கணக்கு வழக்குகளை பார்க்கனும் என்றார். அப்போது நமக்கு புரிந்தது சங்கத்தில் என்ன நடக்குதுன்னு.
இப்படி பலர் தூற்றலாலும் பலர் வாழ்த்துக்களாலும் இந்த தென்னிந்திய நடிகர் சங்கம் இன்றுடன் ஒரு வருடத்தை பூர்த்தி செய்கின்றது. வாழ்த்துகள்