நயன்தாராவின் ஒரே ஒரு அறிக்கையால் விஷாக குழு அமைக்க முன்வந்திருக்கும் நடிகர் சங்கம்…!

திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீபகாலமாக பல நடிகைகள் மீ டூ என்ற பெயரில் வெளிப்படையாக புகார் கூறி வருகிறார்கள்.

தமிழகத்தில் பின்னணிப் பாடகி சின்மயி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் இது தொடர்பாக பத்திரிக்கைகளுக்கு பேட்டியும் அளித்தனர்.

தமிழகத்தில் பின்னணிப் பாடகி சின்மயி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் இது தொடர்பாக பத்திரிக்கைகளுக்கு பேட்டியும் அளித்தனர்.சமீபத்தில் நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளது.நடிகை நயன்தாரா இந்த விவகாரத்தை நடிகர் சங்கத்திற்கு கொண்டு சென்றார்.

நடிகர் சங்கம் மீ டூ ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழு நடிகர் நாசர் தலைமையில் இயங்கப் போகிறது. இந்த குழுவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, மற்றும் பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பு, ரோகினி,, சுஹாஷினி உட்பட சமூக ஆர்வலர் ஒருவர், வழக்கறிஞர் ஒருவர் என 9 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி