சிவாஜி கணேசன் 91வது பிறந்தநாள்: துணைமுதல்வர் ஓபிஎஸ், நடிகர் பிரபு மலர்தூவி மரியாதை

சென்னை:

டிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடியது. அதையொட்டி, அவருக்கு சிலைக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மலர் தூவினார்.

அதைத்தொடர்ந்து  அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நடிகர் பிரபு உள்பட சிவாஜி குடும்பத்தினர், திரையுலக சேர்ந்தவர்கள் என பலர்  மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பல்வேறு சர்சைசைகளுக்கிடையே கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த சிவாஜி சிலை உயர்நீதி மன்ற உத்தரவின்பேரில் அங்கிருந்து அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்திற்குள் வைக்கப்பட்டது. அதையடுத்து,  கடந்த ஆண்டு அக்டோபர் 1ந்தேதி, அடையாறில் அமைக்கப்பட்டுள்ள   நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மனிமண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், சட்டசபை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜூன் மாதம் 29நதேதி சட்டமன்றத்தில் 110வது விதியின்  கீழ் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாக கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.

சிவாஜி சிலைக்கு மரியாதை செய்த ஓபிஎஸ்.. உடன் நடிகர் பிரபு

இந்த நிலையில் நடிகடரல  சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள  சிவாஜி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, மா.பா. பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன்களான  ராம்குமார், நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு, விஜயகுமார், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.சி.அன்பழகன் ஆகியோரும் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.