‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்கவுள்ளதாக இயக்குநர் நாக் அஸ்வின் ட்விட்டர் பதிவு….!

தன்ஹாஜி’ இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படம் ‘ஆதிபுருஷ்’.

பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.

இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது.

ஆதிபுருஷ்’ படத்தின் கதை ராமாயணத்தை முன்வைத்துத் தான் உருவாகிறது என்பதை இயக்குநர் நாக் அஸ்வின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் “பிரபாஸ் அவர்களை கடவுள் ராமராகப் பார்ப்பது உற்சாகத்தைத் தருகிறது. மிகச் சில நடிகர்களே ராமராக இதற்கு முன் பெரிய திரையில் நடித்துள்ளனர். மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார் நாக் அஸ்வின்.