கொரோனா இல்லாத மாவட்டமானது நாகை…

நாகை:

நாகப்பட்டினம் மாவட்டம் கொரோனா  தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா சென்னை உள்பட சில மாவட்டங்களை புரட்டிப்போட்டு வருகிறது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாகைப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.  அவர்களில் பலர் படிப்படியாக குணமாகி வீடு திரும்பினர்.  ஏற்கனவே 48 பேர் டிஸ்சார் செய்யப்பட்ட நிலையில், மீதமிருந்த 3 பேர்  இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அங்கு கடந்த 2 வாரங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாத நிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக நாகை மாறியுள்ளது.