பாம்புபோல நடனமாடி வாக்கு சேகரிக்கும் கர்நாடக அமைச்சர்… வைரலாகும் வீடியோ…

பெங்களூரு:

ர்நாடக வீட்டுவசதித்துறைஅமைச்சர் எம்.டி.பி நாகராஜ் இந்தி படமான நாகின் படத்தின் பாடலுக்கு ஏற்ப பாம்பு நடனம் ஆடி வாக்காளர்களிடையே ஓட்டு வேட்டையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருப்பவர்  எம்.டி.பி.நாகராஜ் (வயது 67), இவர்கள் இந்தியாவில் பணக்கார மந்திரி என கூறப்படுகிறது. 8-ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள நாகராஜ், ரூ.1,015 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார்.

இவர் ஹொஸ்கோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்கள் மத்தியில் நடனமாடி வாக்கு சேகரித்தார்.ஹிந்தி படமான ‘நாகின்’ படத்தின் பிரபலமான பாடலுக்கு நடனமாடினார், நாகராஜ் என்றால் ராஜநாகம் என்று கூறும் அவர், தேர்தலில் சிக்காகலபுர மக்களவை  தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாள ரான வீரப்ப மொய்லிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல்  18 மற்றும் 23 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.