பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்-நாகார்ஜூனா சந்திப்பு….!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வருகிறார், அதே போல் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார் என்பது தெரிந்ததே.

இன்று கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும் நாகார்ஜுனாவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகளின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்ப வசதி காரணமாக தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் அவற்றின் போட்டியாளர்களையும் ரசிகர்கள் ஒரே திரையில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.