பிக்பாஸ்-4 ஷூட்டிங் ஆரம்பமானதா….?

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ – பிக்பாஸ்.

இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் ஜூனியர் NTR, நானி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் கோட் சூட் உடையில் ஷூட்டிங்கில் இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட, இந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 4-க்கான ப்ரொமோ ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது என ரசிகர்கள் கொண்டாட தொடங்கியிருக்கின்றனர்.

கார்ட்டூன் கேலரி