எச் ராஜா மீது பெண்களை இழிவாக பேசியதாக புதிய வழக்கு

நாகர்கோவில்

மிழக அறநிலையத்துறை ஊழியர்கள் குடும்ப பெண்களை இழிவாக பேசியதாக பாஜக தலைவர் எச் ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.   அந்த உரையில் அவர் அறநிலையத்துறை அதிகாரிகள், மற்றும் ஊழியர்களையும் அவர்களின் குடும்ப  பெண்களையும் மிகவும் தரக்குறைவாக பேசியதாக தகவல் வந்த்து.

அதனால் மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் கடந்த போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அறநிலையத் துறை ஊழியர்கள் காவல்துறையினரிடம் எச் ராஜா குறித்து புகார் அளித்துள்ளனர்.

அத்துடன் ராமேஸ்வரம் ராமநாத சாமி கோவில் அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.

இவ்வாறு ராஜாவின் பேச்சு பரபரப்பாகி வரும் சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் நகரின் கோட்டார் காவல் நிலையத்தில் எச் ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் அவதூறு பரப்பும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவின் கீழ் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன,