30ந்தேதி இயக்கப்படும் நாகர்கோவில் தாம்பரம் சுவிதா ரயிலுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னை:

புத்தாண்டையொட்டி வரும் 30ந்தேதி இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயிலுக்கு இன்று முன்பதிவு தொடங்குகிறது.

இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,

நாகர்கோவில் – தாம்பரம் சுவிதா (வண்டி எண்: 82646)  சிறப்பு ரயில் நாகர்கோவிலி லிருந்து டிசம்பர் 30ம் தேதி மாலை 05:05 க்கு கிளம்பி அடுத்தநாள் காலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிறுத்தங்களில் நிற்கும்.

இதற்கான முன்பதிவு இன்று  (டிசம்பர் 8) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி