“வேலை கிடைத்தால் உயிர்த்தியாகம் செய்கிறேன்”: கடவுளுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தற்கொலை செய்த இளைஞர்..

 

நாகர்கோயில் :

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள ஏழுவிளையை சேர்ந்த நவீன், பொறியியல் பட்டதாரி ஆவார்.

பல ஆண்டுகளாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்தார். அதன் உச்சமாக ‘’ எனக்கு வேலை கிடைத்தால் உயிர்த்தியாகம் செய்கிறேன்’’ என கடவுளிடம் வேண்டியுள்ளார்.

‘கடவுள்’ அவருக்கு கருணை காட்டினார். மும்பையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நவீனுக்கு உதவி மேலாளர் வேலை கிடைத்தது. ஆனால் வேலைக்கு போகவில்லை.

கடவுளிடம் செய்து கொடுத்த சத்தியத்தை மீறக்கூடாது என்பதால், தான் வேண்டிக்கொண்டபடி, தன் உயிரை மாய்த்து கொண்டார். ஓடும் ரயிலில் பாய்ந்து நவீன் தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கு முன்னதாக அவர், தன் பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் இந்த தகவலை குறிப்பிட்டிருந்தார்.

“வேலை கிடைத்தால் உயிர்த்தியாகம் செய்வதாக ஆண்டவனிடம் சத்தியம் செய்து இருந்தேன். ஆண்டவனும் வேலை கொடுத்து விட்டான். ஆண்டவனுக்கு சத்தியம் செய்தபடி கடவுளிடமே நான் ஐக்கியமாகிறேன்” என அந்த கடிதத்தில் நவீன் எழுதி இருந்தார்.

இந்த சம்பவம் நாகர்கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– பா.பாரதி