ரஜினி – நக்மா சந்திப்பு

“பாட்சா” படத்தில் ரஜினி – நக்மா

இன்று நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பான மகிளா காங்கிரஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் நக்மா  ரஜினியை சந்தித்தார்.

 

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் இச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

ரஜினியை பாஜகவில் இணையுமாறு அக் கட்சியின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சி பிரமுகர் நக்மாவின் சந்திப்பை அரசியல் நோக்கர்கள் உற்று கவனித்துவருகிறார்கள்.

 

இருபது வருடங்களுக்கு முன், ரஜினி  – நக்மா இணைந்து  நடித்த “பாட்ஷா” திரைப்படம் பெரு வெற்றி கண்டது. இப்படத்தின் விழாவில் தமிழக அரசியல் குறித்து ரஜினி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சந்திப்பின்போது, அந்த காலகட்ட நினைவுகளை இருவ பகிர்ந்துகொண்டதாகவும், காங்கிரஸ் கட்சியில் ரஜினி சேர வேண்டும் என்று நக்மா வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வழக்கம்போல ரஜினி பட்டும்படாமல் பதில் அளித்து நக்மாவை வழியனுப்பி வைத்ததாகவும் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி