நாக்பூர்

காராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குற்ற வழக்குகள் குறித்த விவரம் அளிக்காததால் நாக்பூர் நீதிமன்றம், சம்மன் அனுப்பி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி பங்கீடு தொடர்பான சர்ச்சையில் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது.  அக்கட்சி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ள நிலையில் முன்னாள் பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகப் பதவி ஏற்றார்.   ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத நிலையில் அவர் ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு சிவசேனா, கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.  முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நாக்பூர் சட்டபெரவை தொகுதி உறுப்பினராக உள்ளார்.  இவர் கடந்த 1996 மற்றும் 1998 ஆம் வருடத் தேர்தல் நேரத்தில் அளித்த பிரமாண பத்திரத்தில் தன் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்கள் வெளியிடவில்லை எனப் புகார் எழுந்தது

இதையொட்டி நாக்பூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் பட்நாவிஸ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.   இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.  அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபப்ட்ட்து.

கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றம் மீண்டும் இவ்வழக்கை விசாரணை செய்ய நாக்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதனால் நாக்பூர் நீதிமன்றம் முன்னாள் மகாராஷ்டிர பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிசுக்கு சம்மன் அனுப்பியது.   நேற்று  காவல்துறையினர் பட்நாவிசின் இல்லத்துக்குச் சென்று அந்த சம்மனை அளித்துள்ளனர்.