திருப்பதி

திருப்பதி பாலாஜி முன் மோடி தனக்கு கொடுத்த வாக்குறுதி பற்றி சந்திரபாபு நாயுடு நினைவுறுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்திருந்தார்.   ஆனால்  மத்திய அரசு அதை மறுத்து விட்டது.    இதனால் மத்திய அரசிலிருந்து விலகிய நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது.  தெலுங்கு தேசம் கட்சியின் போராட்டத்தினால் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடர் முழுவதுமாக முடங்கிப் போனது.

இந்த நிலையில் தனது போராட்டத்தின் அடுத்த கட்டமாக திருப்பதியில் ஒரு மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்த சந்திரபாபு நாயுடு திட்ட்டமிட்டுள்ளார்.  இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகர் ஒருவர், “திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெருமாள் முன்பு மோடி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக வாக்களித்துள்ளார்.    அந்த வாக்குறுதியை தற்போது மோடிக்கு சந்திரபாபு நாயுடு நினைவுக்கு கொண்டு வர உள்ளார்.

திருப்பதியில் “துரோக அரசியலுக்கு எதிரான போராட்டம்” என்னும் பெயரில் இப்போது நாயுடு ஒரு பொதுக்கூட்டம் நடத்த உள்ளார்.  அப்போது திருப்பதியில் மோடி பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஒளிபர்ப்பபட உள்ளது.   இதன் மூலம் மோடிக்கு அவர் கடவுள் சன்னிதியில் அளித்த வாக்குறுதியை நினைவு படுத்த எண்ணி உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.