தமிழ் திரையுலகில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நமீதா.

தமிழ் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் பபடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் .

கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஆனாலும் அரசியல் பொதுக்கூட்டங்களிலோ, பிரசாரக் கூட்டங்களிலோ அதிகம் தலைகாட்டவில்லை.

இந்நிலையில் நேற்று திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டபோது, அவரைச் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் நமீதா.

பின் பத்திரிகையாளர்களிடம் “தமிழக மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இறுதியாக அம்மாவின் ஆசியில் பாஜகவில் இணைந்துள்ளேன். பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்பது என் மனதில் எப்போதுமே இருக்கிறது. அதோடு சேர்த்து இப்போது விலங்குகள் நலனுக்காகவும் பாடுபடப் போகிறேன்.

நாட்டின் வளர்ச்சி, பெண்கள் நலன், குழந்தைகள், கல்வி உள்ளிட்ட பல விஷயங்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி செய்து வருகிறார். மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என்றே அரசியல் கட்சிகளில் இணைகிறோம். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று பேசினார் நமீதா.