நக்கீரன் கோபால் கைது: கமல்ஹாசன் கண்டனம்

த்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி குறித்த செய்தியில் ஆளுநர் குறித்து எழுதியதாக நக்கீரன் இதழ் மீது ஆளுநர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டதால் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர், “ஊடகங்களின் சுதந்திரத்தில் கை வைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதற்கு ஒப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆங்கிலேயர் காலத்து வாய்ப்பூட்டுச் சட்டத்தை தற்போது இந்த அரசு வேறு வடிவத்தில் செயல்படுத்துவதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் மிக முக்கியமாக ஊடக சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nakkeeran Gopal arrested: Kamal Haasan condemned, நக்கீரன் கோபால் கைது: கமல்ஹாசன் கண்டனம்
-=-