தனது 35-வது பிறந்தநாளில் அப்பாவான செய்தியை அறிவித்த நடிகர் நகுல்….!

2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஜூஜூ என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தேவயாணியின் தம்பி நகுல்.

கடந்த 2016-ம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி பாஸ்கர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .

சமூகவலைதளங்களில் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது பகிரும் நகுல் தனது 35-வது பிறந்தநாளான இன்று தன் மனைவி கர்ப்பம் தரித்திருப்பதாகவும், இந்த பிறந்தநாள் தனக்கும் தன் மனைவிக்கும் ஸ்பெஷலான ஒரு நாள் என்றும் பதிவிட்டுள்ளார் .