வாட்டர் டப்பில் அமர்ந்தபடி குழந்தை பெற்ற நகுல் மனைவி.. படங்கள் வெளியானதால் பரபரப்பு..

டிகர் நகுல் பிரபல நடிகை தேவயானி யின் தம்பி. நகுல் காதலில் விழுந்தேன், மாசிலாமணி. பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டு இவருக்கும் காதலி ஸ்ருதிக்கும் திருமணம் நடந்தது. நான்கு வருடம் கழித்து சென்ற ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகீரா என பெயரிட்டனர்.
நகுல், ஸ்ருதி தம்பதிக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. தற்போது நகுல் தனது இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாட்டர் பாத் டப்பில் ஸ்ருதி குழந்தை பெற்ற படத்தை வெளியிட்டிருக் கிறார். இது சர்ச்சையாகி இருக்கிறது வாட்டர் பாத் டப் மீது நகுல் அமர்ந்தி ருக்க அவர் மீது மனைவி ஸ்ருதி சாய்ந்த படி பாத் டப்பில் உட்கார்ந்துக் கொண்டு வெதுவெதுப்பான தண்ணீரில் குழந்தை பெற்றிருக்கிறார்.


இது சர்ச்சை ஆகி இருக்கிறது. வீட்டில் இப்படி பிரசவம் பார்ப்பது ஆபத்தானது என சிலர் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இது வீட்டில் நடந்த பிரசவம் இல்லை. ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனை யில் நடந்த பிரசவம்.
இதுபற்றி டிவிட்டரில் விளக்கம் அளித் துள்ள டாக்டர் சவீதா கதிரவன், ஐதராபாத் தில் Sanctum Birth Centreல் மருத்துவர் களின் உத வியோடுதான் நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதிக்கு பிரசவம் நடை பெற்றது. மருத்துவர்கள், நர்ஸ்கள் என அனைவரது முன்னிலையில் தான் இது நடந்தது. இந்த விஞ்ஞான உண்மையை தெரியாமல் குறை கூறுவது தவறு’ எனக் கூறி உள்ளார்.