சென்னை: ஏழுபேரை விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரை பதவி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 7 பேரில் ஒருவர் நளினி. அவர் ஒரு ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது: அரசின் முடிவுக்கு பிறகும் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். 10 ஆண்டுகள் சிறையில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள்  நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் தமிழக அமைச்சரவை பரிந்துரைத்தும் ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என்னை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.