ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி

சென்னை

ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக செய்திகள் வந்துள்ளன

ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே எந்தக் கட்சிகள் போட்டியிடப் போகின்றன என ஒரு எதிர்பார்ப்பு மாநிலம் எங்கும் உள்ளது.   திமுக தனது வேட்பாளரை அறிவித்து விட்டது.   காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுக வுக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.   அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப் படுவார் என அக்கட்சி கூறி உள்ளது. டி டி வி தினகரன் தன்னை வேட்பாளராக ஏற்கனவே அறிவித்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் இன்று, “ ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்” என அறிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.