நாமக்கல்: வெடி விபத்தில் பட்டாசு வியாபாரி பலி

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பூசூரை சேர்ந்தவர் பாலுச்சாமி. வெடி வியாபாரியான இவரது வீட்டில் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பட்டாசு குவியல் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சிக்கிய பாலுச்சாமி உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.