சேலம்:

நாமக்கல் குழந்தைகள் விற்பனை விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் பிருந்தா ஆகியோர்  விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 30 ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக ஓய்வு பெற்ற செவிலியர் அமுதாவின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணை மேற்கண்ட காவல்துறையினர்,. அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன்,   ஈரோடு தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர்கள் நிஷா, லீலா, அருள் மணி, செல்வி உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில்,  கொல்லிமலை பகுதியில் இருந்து சுமார் 10 குழந்தைகள் விற்கப்பட்டது தெரிய வந்தது. இந்த குழந்தைகள் தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கை தம்பதிக்கும் விற்கப்பட்டது தெரிய வந்ததுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளாக  சி.பி.சி.ஐ.டி. துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் ஆய்வாளர் பிருந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.