சேலம்:

சேலம் அருகே உள்ள நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகள்  விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் 20 குழந்தைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் 10 குழந்தைகளை விற்பனை செய்திருப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மட்டும் 10 குழந்தைகளை விற்றிருப்பது தெரிய வந்துள்ளது. கைதான அரசு ஆம்புலன்சு  ஓட்டுநர் முருகேசன், கொல்லி மலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அமுதவள்ளி பேசும் ஆடியோ வெளியானதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அமுதவல்லி, அவரது கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவ மனையில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலியர் பர்வின்னை போலீஸ் கைது செய்துள்ளது.

விசாரணையில்,வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அரசு சுகாதாரத்துறை தரப்பிலும், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கொல்லிமலை பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டதில்,  20 குழந்தைகள் மாயமாகி உள்ளது தெரிய வந்துள்ளது.

குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் உள்ள நிலையில் 20 குழந்தைகள் மாயமாகி உள்ளதாக சுகாதாரத்துறையினர்  தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம்  காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், கொல்லிமலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதா விடம் விற்றதாக ஒப்புதல் அளித்துள்ளார்.  குழந்தை கள் விற்பனை தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது.