சேலம்:

நாமக்கல் ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி  நர்ஸ் அமுதவள்ளி உள்பட 6 பேரின் ஜாமீன் மனுக்களை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக  நடைபெற்று வந்த குழந்தைகள் விற்பனை பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், குழந்தைகள் விற்பனை தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்ற வாளிகளை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும், பெங்களூரில் ரேகா என்ற இடைத்தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் நாமக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், லீலா, ரேகா, நந்தகுமார், சாந்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.