நாமக்கல் தனியார் மருத்துவமனை நர்ஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

நாமக்கல்:

நாமக்கல்லில் உளள பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த நர்ஸ் ஒருவர், அதே மருத்துவ மனையின்  4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் அருகே உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியர்ஷினி (வயது 23). இவர்  அநதப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடிவடைந்ததும், திடீரென மருத்துவமனையின் 4வது மாடிக்கு சென்றவர், அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்துதகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மருத்துவமனை நிர்வாகம் உள்பட  சக ஊழியர்களிட மும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது, மேற்படிப்பு விரும்புவதாக பிரியதர்ஷினி தனது பெற்றோரிடம் வலியுறுத்தி வந்தாகவும், ஆனால், அவரது பெற்றோர் அதற்கு பதில் தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பிரியதர்ஷினியின் தந்தை, பெயின்டர் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.