ஊரடங்கில் விஜயின் பிகில் படம் பார்க்கும் நமல் ராஜபக்ச….!

உலகமெங்கும் பரவி இருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஏனைய நாடுகளை போல இலங்கையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு சவால்களை விடுத்து போட்டி நடத்தி வருகிறார். அதில், #7DayChallenge என்ற ஹேஷ்டேக்கில் விஜய்யின் பிகில் படம் பார்ப்பது போல் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் “ஏழு நாள் சவாலின் இறுதி நாள் இன்று. நான் மிகவும் விரும்பும் நடிகரான விஜய் நடித்த நான் விரும்பும் படமான பிகிலை எண்ணிலடங்கா முறையாக நான் பார்க்கும்போது லிமினி என்னைப் பார்த்துவிட்டார்.” என்று பதிவிட்டுள்ளார் .

You may have missed