காமன்வெல்த் 2018: குத்துச்சண்டையில் இந்திய வீரர் நமன் தன்வாருக்கு வெண்கலம்

கோல்டுகோஸ்ட்:

காமன்வெல்த் போட்டியில்  இன்று  நடைபெற்ற  குத்துச்சண்டை  விளையாட்டில் 19 வயதே ஆன இந்திய வீரர் நமன்  தன்வார் வெண்கலம் வென்றனர்.

91 கிலோ எடை பிரிவின் அரை இறுதி போட்டியில்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆஸ்திரேலியா வீரர் ஜேஷன் வாட்டிலிடம் தோல்வி அடைந்ததால் தன்வாருக்கு வெண்கலம் கிடைத்தது.

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில்  நடைபெற்று வருகின்றன.

இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது

இன்று 9வது நாளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற  25 மீட்டர் ரேபிட் பயர்  துப்பாக்கி சுடுதல் போட்டியில் அணிஷ் , இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவந்த் தங்கம் வென்றுள்ள நிலையில், தற்போது பாக்சிங்கில் மேலும் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.

இதுவரை இந்தியா 16 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை பெற்று 3வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.