புதுவை:
மித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணமானார்.

காங்கிரஸிலிருந்து விலகிய நமச்சிவாயம் டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் நட்டா முன்னிலையில் நாளை இணைகிறார். அவருடன் தீப்பாய்ந்தானும் சேருகிறார். மேலும் பல எம்எல்ஏக்கள் காங்கிரஸிலிருந்து விலக உள்ளதால் ஆட்சிக்கு ஆபத்து உருவாகியுள்ளது.

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராக இருந்தவர் நமச்சிவாயம். நாராயணசாமி மீதான அதிருப்தியால் நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். அவருடன் ஊசுடு தனித் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவைச் சந்தித்து அளித்தனர். இருவரின் ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.